சினிமா செய்திகள்

அஜீத் சூர்யா ரசிகர்கள் சேர்ந்து விஜய்யைத் திட்டுகிறார்களா? – ட்விட்டரில் பரபரப்பு

விஜய் அஜீத் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. எல்லோருக்கும் கையில் கைபேசியும் ட்விட்டர் கணக்கும் இருந்தால் போதும் என்பதால் மிகத் தாரளமாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

பிப்ரவரி 6 ஆம் தேதியன்று, தமிழகத்தில் விஸ்வாசம் படம் சுமார் 73 கோடிவரை வசூல் செய்துவிட்டதென்றும், இது விஜய்யின் மெர்சல் பட வசூலை முந்திவிட்டதென்றும் சொன்னார்கள்.

இந்தத் தகவலை, தாழ்வுமனப்பான்மையில் விஜய் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதை அஜீத் ரசிகர்கள் செய்வதாகச் சொல்லிக்கொண்டார்கள்.

இன்று, வன்மத்தில் கதறும் விஜய் ஃபேன்ஸ் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி விஜய்யை மட்டுமின்றி அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரையும் சேர்த்துத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை அஜீத் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும் சேர்ந்து செய்வதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.

அதற்குக் காரணம், சூர்யாவின் அப்பா நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் கைபேசியைத் தட்டிவிட்ட காணொலி வேகமாகப் பரவியது.

அதை வேகமாகப் பரப்பிக் கொண்டிருப்பது விஜய் ரசிகர்கள்தாம் என்றும் அதற்க்ய் எதிர்வினையாக இது நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தரங்கெட்ட சொற்களில் நட்க்கும் இந்தச் சண்டை, சம்பந்தப்பட்ட நடிகர்களுக்குப் பெருமை தேடித்தராது, மாறாக அது அவர்களுக்கும் சேர்த்து அவமானமே என்பதை எப்போது உணரப்போகிறார்களோ?

Related Posts