சினிமா செய்திகள் நடிகர்

தயாரிப்பாளர்கள் சங்கத்தை வெறுப்பேற்றுகிறதா சிம்பு படக்குழு?

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லியிருந்ததாம்.

ஆனால் அதன்பின், மணிரத்னம் படம் அதைத்தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கும் படம் ஆகியனவற்றில் நடிக்கிறார்.

இதற்கு மைக்கேல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் புகார் அளித்தார்.

அதன்பின் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை வந்த படக்குழு இப்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்தற்கிடையே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகார் தொடர்பாகப் பேசிமுடித்துவிட்டு படப்பிடிப்பை நடத்தச் சொல்லலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேச்சு வந்திருக்கிறது.

இதுதொடர்பாகப் படக்குழுவைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அதுபற்றி எந்த அக்கறையும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பது தெரிகிறது.

அமைதியாகப் படப்பிடிப்பை நடத்துவோம் என்றில்லாமல், அடிக்கடி அப்படம் பற்றி ஏதாவதொரு செய்தியை அவர்களே வெளியிடுகிறார்கள்.

படப்பிடிப்பில் மகத் என்றொரு செய்தியும் புகைப்படமும் வெளியிடுகிறார்கள். அடுத்து படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு தன் சகோதரி குழந்தையுடன் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது, தயாரிப்பாளர் மைக்கேல்ராயப்பன் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை வெறுப்பேற்றவே இம்மாதிரி செய்கிறார்கள் என்று திரையுலகில் பேச்சு.

Related Posts