சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெளியாக
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. அப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லியிருந்ததாம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் ஐஸ்வர்யா
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார். அவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர். மகத்துக்காகவே தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மகத்துக்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளார் நடிகர் சிம்பு. இது தொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள மகத்,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓளிபரப்பாகி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார். மகத்தின் செயல்பாடுகள் குறித்து, ‘பிக் பாஸ் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகத் உறுதியாக இருங்கள். பிக் பாஸ் ஒரு விளையாட்டு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இருக்கும் நடிகர் மகத்தின் செயல்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன. வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நெருங்கிப்பழகுவது பரபரப்பாகி உள்ளது. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாகத் தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட்


















