சர்ச்சை நடிகருக்கு சிம்பு ஆதரவு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்
பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இருக்கும் நடிகர் மகத்தின் செயல்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன. வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நெருங்கிப்பழகுவது பரபரப்பாகி உள்ளது.
இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாகத் தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கு’னு எல்லோரும் சொல்லுகிறார்கள்.
நமக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்து வேறு ஒரு பொண்ணை தொட்டால் நம் கேர்ள் பிரெண்ட் கோபத்தில் அறை விடுவார். அவரது கேர்ள் பிரெண்ட் அப்படியில்லை. அது ஏன் நமக்கு கஷ்டமாக இருக்குனு எனக்குப் புரியலை. பிடிக்காத ஒரு பொண்ணை அவன் கையைப் பிடிச்சு இழுத்தா, அதைத் தப்புன்னு சொல்லலாம். அவன் அப்படி செய்யலையே? என்று அவருக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
மகத்துக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துவரும் சிம்பு இப்போது அவருக்கு ஆதரவாகக் கருத்து சொல்லியிருப்பதால் மகத்துக்கு ஆதரவு கூறியிருக்கிறது என்கிறார்கள்.











