சிம்புவும் ஓவியாவும் இணையும் புதியபடம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா பற்றி எந்தச் செய்தி வந்தாலும் அது பெரிதாகப் பேசப்படுவதாகவே இருக்கிறது.
அவரோடு சிம்புவும் இருக்கிறார் என்றால் கேட்கவும் வேண்டுமோ?
பிப்ரவரி 14 காதல்ர் தினத்தை முன்னிட்டு ஓவியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பெண் இயக்குநர் அனிதாஉதீப் என்பவர் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் 90 எம் எல். அதாவது 90 மில்லி. நைண்ட்டி கட்டிங் என்று சொன்னால் எளிதாகப் புரியலாம்.
படத்தின் பெயர் ஓவியாவின் 90 எம் எல் என்றுதான் இருக்கிறது. எனவே படத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.
இந்தப்படத்துக்கு இசையமைப்பவர் சிம்பு.
ஒளிப்பதிவு அரவிந்த்கிருஷ்ணா, படத்தொகுப்பு ஆண்டனி என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு தேநீர்க்கடையில் அமர்ந்து ஓவியா தேநீர் குடிப்பது போன்று முதல்பார்வை அமைந்துள்ளது.











