சினிமா செய்திகள் நடிகை

பிப்ரவரி 13 இரவு தமன்னா எங்கிருந்தார்? என்ன செய்தார்?

கோவையில் பிப்ரவரி 13 அன்றுஇரவு மகாசிவராத்திரி என்கிற பெயரில் ஈஷா யோகா மையத்தின் சார்பில்வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் மிகப் பிரம்மாண்டமாக விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

தமிழக ஆளுநர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இவ்விழாவில் பங்கெடுத்தனர்.

ஆதியோகி சிலைக்கு வெகு தொலைவில் அமைக்கப்பட்ட தடுப்பில் அமர்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. மேலும் முன்னேசெல்ல செல்ல கட்டணம் எகிறிக் கொண்டே செல்லும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படிஆதியோகி சிலை முன்பு, ஐக்கியின் பின்னால் அமர்வதற்கு ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகச் சொல்லும் வரிசையில் இருந்தார் நடிகை தமன்னா.

அந்த நிகழ்வில் சில மணி நேரங்கள் இருந்த தமன்னா, மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார் என்று அங்கிருந்தவர்கள் சொல்கிறார்கள்.

அதன்பின்னர் ஜக்கிவாசுதேவைச் சந்தித்து ஆசி பெற்றாராம்.

பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தமன்னாவின் இந்த ஆன்மீக நாட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Related Posts