சூர்யா பற்றி நள்ளிரவில் ட்வீட் – பற்றிப் பரவும் செல்வராகவன் கருத்து
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் என்ஜிகே.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் இயக்குநர் செல்வராகவன் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.
அதில், சூர்யாவின் நடிப்பைப் பற்றி வியந்திருப்பதோடு, அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்புமே இதற்குக் காரணம் என்று சொல்லியிருப்பதோடு மீண்டும் சூர்யாவோடு பணிபுரிய விருப்பம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்றும் ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்பட்டபோது சூர்யா சிறப்பாக நடித்ததால் செல்வராகவன் வியந்து பாராட்டியதாகவும் சொல்கிறார்கள்.
எல்லா வியாபார கணக்குகளையும் மீறி படைப்பாளியாக ஒரு கலைஞனை வியந்த தருணம் அது என்கிறார்கள் அப்படக்குழுவினர்.











