7 தோற்றங்களில் விக்ரம் – கோப்ரா பட முதல்பார்வை
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி,கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர்.
‘கோப்ரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று (பிப்ரவரி 28) மாலை 5 மணியளவில் இணையத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி, படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளார்.
அந்த முதல்பார்வையில் 7 விதமான தோற்றங்களில் விக்ரம் இருக்கிறார்.விக்ரம் முழுமையாகத் தனது உடலமைப்பை மாற்றி, இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்தவுடன், இந்தப் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.













