எஸ்கே 20 படத்தின் விலை மற்றும் வெளியீட்டுத் தேதி – புதிய தகவல்
சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்றழைக்கப்படும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது.சத்யராஜ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளீயீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.
அண்மைக்காலமாகப் பெரிய படங்களின் தமிழக திரையரங்கு விநியோக உரிமைகளைக் கைப்பற்றி வரும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை ஏன் கைவிட்டது? அன்புவுக்கு எப்படி இந்தப்படம் கிடைத்தது? என்கிற கேள்வி திரையுலகில் பலருக்கும் இருக்கிறது.
அவற்றிற்கான விடை…
இந்தப்படத்தின் தமிழக விநியோக உரிமையையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் கேட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கேட்டது டிஸ்ட்ரிபியூசன் எனும் விநியோக முறையில்.
அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
அதனால் மினிமம் கியாரண்டி எனும் குறைந்தபட்ச பாதுகாப்பு முறையில் படத்தைக் கேட்ட அன்புவுக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார்களாம்.
அதற்காக அவர் கொடுத்திருக்கும் விலை சுமார் 27 கோடி என்கிறார்கள்.
அதோடு இப்படத்தின் வெளீயீட்டுத் தேதியையும் முடிவு செய்துவிட்டார்களாம். ஆகஸ்ட் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறதாம்.











