சினிமா செய்திகள்

வெற்றிமாறன் தனுஷ் மோதல் – வடிவம் மாறும் வடசென்னை 2

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற படம் வடசென்னை.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர் உட்பட பலர் நடித்திருந்தனர். முதல்பாகம் வெளியான போதே அப்படத்தின் இரண்டாம்பாகமும் உருவாகும் என்று சொல்லியிருந்தனர்.

அதனால், தனுஷ் வெற்றிமாறன் ஆகியோர் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் வடசென்னை 2 எப்போது? என்கிற கேள்வி வந்துகொண்டே இருந்தது.

அவர்களும், விரைவில் அப்படத்தைத் தொடங்குவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.அண்மைக் காலமாக அந்தப் பேச்சை இருவருமே எடுக்கவில்லை.ஆனாலும் அப்படம் குறித்த அறிவிப்பு வரும் என்று திரைப்பட இரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், அது எப்போதுமே நடக்காது என்று சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம்,மிகவும் நட்பாக இருந்த வெற்றிமாறனும் தனுஷும் இப்போது எதிரும் புதிருமாக ஆகிவிட்டனராம்.இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிவிட்டதாம்.

அதனால் வெற்றிமாறன் ஓர் அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம்.

அதன்படி, வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதில்லை. அவரிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திகேயன் என்பவர் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.வெற்றிமாறனே தயாரிக்கிறார்.

இரண்டாம் பாகத்தில்,தனுஷ் நடித்த அன்பு கதாபாத்திரத்துக்கு இணையாக இயக்குநர் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

இப்போது, அன்பு கதாபாத்திரம் மட்டுமின்றி ராஜன் கதாபாத்திரத்துக்கும் வேறு நடிகரைத் தேர்வு செய்யும் வேலைகள் நடக்கிறதாம்.

நடிகர்கள் தேர்வு எல்லாம் திருப்திகரமாக முடிந்த பின்பு அப்படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

இதனிடையே, வடசென்னை கூட்டணி சிறப்பாக அமைந்த கூட்டணி.அது உடையக் கூடாது வடசென்னை இரண்டாம் பாகத்திலும் அக்கூட்டணியே தொடர வேண்டும் சிலர் பாடுபடுகின்றனராம்.

அதற்காக வெற்றிமாறன், தனுஷ் ஆகியோரிடம் சமரசம் உருவாக்க இருவரின் நலம் விரும்பிகள் முயன்று வருகின்றனர்.

அவர்கள் முயற்சி பலித்து இருவரும் சமரசம் ஆவார்களா? அல்லது முறிந்தது முறிந்ததுதான் என்று இருவரும் பிடிவாதமாக இருப்பார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதேநேரம் பல சமரச முயற்சிகள் தோல்வி அடைந்த பின்னர் தான், தன் உதவி இயக்குநரை இயக்க வைத்து வடசென்னை 2 படத்தைத் தயாரிப்பது என்கிற முடிவை வெற்றிமாறன் எடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts