சினிமா செய்திகள் நடிகர்

யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அமீரின் யோகி படம் மூலம் நடிகராக அறிமுகமான பாபுதான் இப்போது தமிழ்த்திரையுலகில் முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு.

வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகனாக நடிக்கவே விரும்புகிறார்கள். விவேக்கை எல்லாப்படங்களிலும் நடிக்க வைக்க முடியாது. சூரியின் தேதிகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

இந்தக்காரணங்கள் மட்டுமின்றி யோகிபாபுவின் நகைச்சுவைக்காட்சிகளுக்கு மக்களிடம் வரவேற்பும் இருக்கவே அவருடைய தேதி கிடைப்பதும் கஷ்டம் என்கிற நிலை உருவாகிவிட்டதாம்.

இப்போது விஜய், அஜீத் ஆகியோர் படங்களிலும் அவர் நடிக்கிறார். இதனால் அவருடைய சந்தை மதிப்பு பெரிதும் உயர்ந்திருக்கிறது.

இப்போது அவர் நாள் கணக்கில் சம்பளம் பேசுகிற பெரிய நடிகராகியிருக்கிறார்.

அவருடைய ஒரு நாள் சம்பளம் மூன்றரை இலட்சம் என்கிறார்கள்.

அப்படிக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் அவர் கொடுக்கும் தேதியில்தான் படப்பிடிப்பு என்கிற நிலை உருவாகியிருக்கிறதாம்.

Related Posts