அஞ்சாதே 2 படத்தில் அருண்விஜய்?
2008 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘அஞ்சாதே’. நரேன், பிரசன்னா, அஜ்மல், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘அஞ்சாதே 2’ படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம் மிஷ்கின். சிம்பு நடிக்கும் படத்துக்கு இடையிலேயே இந்தப்படத்தையும் இயக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முதல்பாகத்தைத் தயாரித்த நேமிசந்த் ஜபக்கே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தில் நாயகனாக அருண்விஜய் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.படத்தின் கதையைக் கேட்ட அருண்விஜய் உடனே ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அவர் தற்போது நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளைக் காட்டிலும் இந்தப்படத்துக்கு முன்னுரிமை கொடுக்கத்தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
படப்பிடிப்புத் தேதிகள் தொடர்பாக தெளிவு கிடைத்ததும் இப்படம் குறித்த அறிவிப்பு வெளீயாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.











