செய்திகள் நடிகை

பிக்பாஸ் வண்டி பிக்கப் ஆக ஓவியா தயவு தேவை

பிக்பாஸ்

‌ஓவியா துணை இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக சம்பாதிக்க முடியாது என்பதை ‘என்டமல்’ நிறுவனம் போன சீசனில் ஓவியா வெளியேறிய போதே உணர்ந்திருக்கும். ஓவியாவால் பார்வையாளர்களின் கவனம் பெற்ற ஆரவ்’வைக் கொண்டு நிகழ்ச்சியை கொண்டு சென்றார்கள்.

இந்த சீசனில் பார்வையாளர்களைக் கவரவே ஆரம்பத்தில் ஓவியாவை கொண்டுவந்துள்ளார்கள். பிக்பாஸ் ப்புரமோக்களில் ஓவியா வரும் ப்புரோமோ மட்டும் தான் ஒன்னரை மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. ஆக பிக்பாஸ் வண்டி பிக்கப் ஆக வேண்டுமானால் ஓவியா தயவு நிச்சயம் வேண்டும். இதற்காகவே பெரும் தொகையை தயாரிப்பு நிறுவனம் செலவு செய்திருக்க வேண்டும். ஆனாலும் ஓவியாவிடம் போன சீசனில் இருந்த ஆர்வமும் புத்துணர்ச்சியும் இப்போது இருப்பாதக தெரியவில்லை.

‌இந்த சீசனில் பரணி கேரக்டருக்கு பதிலாக சென்ட்ராயனை களமிறக்கியுள்ளார்கள். சச்சரவுகளை உருவாக்க, பிரிந்து வாழும் தாடி பாலாஜி-நித்யா தம்பதி உள்ளனர். காயத்திரி வேலை மும்தாஜ்க்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஓவியா இடத்தை பிடிக்க யாசிகா ஆனந்த் அதிக முயற்சி செய்யலாம். ஆரவ்’வாக மகத் இருக்கலாம். ஆக இந்த சீசனிலும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் கொண்டு சென்று பணம் பார்க்கும் வேலை நன்றாக நடந்தேறும்.

‌- மூர்த்தி

Related Posts