சினிமா செய்திகள்

விஸ்வாசம் இசையை காப்பியடித்த இந்திப்படம் – இமான் அதிர்ச்சி

மிலாப் ஜவேரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் ‘மர்ஜாவன்’.

இந்தப் படத்தின் முன்னோட்டம் செப்டம்பர் 26 காலை வெளியிடப்பட்டது.

இந்த முன்னோட்டத்தைப் பார்த்த தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை அப்படியே அந்த முன்னோட்டத்தின் இறுதியில் வரும் காட்சிகளுக்கு பயன்படுத்தி இருந்தார்கள்.

அந்தப் பின்னணி இசை ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் அறிமுகமாகும் காட்சியில் இடம்பெற்றதாகும்.

இந்த முன்னோட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில், ‘விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் இமான் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பதிவில்,

‘மர்ஜாவன்’ இந்திப் படத்தின் ட்ரெய்லரில் ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, இசை உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்தோ முன்கூட்டியே எதுவும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை

இவ்வாறு இமான் கூறியுள்ளார்.

சமூகவலைதளங்களின் பெருக்கத்தால் இந்த விசயம் உடனடியாக வெளியே தெரிந்திருக்கிறது.

Related Posts