விஜய் அஜீத்துக்கு கஸ்தூரி அறிவுரை
விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் உலகறிந்த செய்தி. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகிய பிறகு மோதலும் அதிகமாகிவிட்டது.
நேற்று திடீரென தேவாங்கு அஜீத், ஆமை விஜய் ஆகிய ஹேஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.
விஜய் ரசிகர்கள் அஜீத்தை தேவாங்கு என்று சொல்லியும் அஜீத் ரசிகர்கள் விஜய்யை ஆமை என்று சொல்லியும் டிரெண்ட் செய்தார்கள்.
இதைப்பார்த்த நடிகை கஸ்தூரி, அடப்பாவிகளா இந்தியாடிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக்குகளா?
இது என்ன மாதிரியான ரசிக மனப்பான்மை, இந்த எதிரி மனப்பான்மை தொடர்வது யாருக்கும் நல்லதல்ல. விஜய் அஜித் ஆகிய இருவருமே இந்தச் சிக்கலை இணைந்து கையாண்டு தீர்க்கவேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.









