சினிமா செய்திகள்

பிக்பாஸ் பக்கா ஸ்கிரிப்ட் – கவின் வெளியேறியதால் கசிந்த உண்மை

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ளது. இந்நிலையில், முக்கிய போட்டியாளரான கவின், ரூ.5 லட்சம் பணத்திற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

லாஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்களில் ஏற்கனவே முகேன் இறுதிச் சுற்றுக்கு முனேறிய நிலையில், மற்ற இருவரில் கவின் ஒருவராக இருப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந் நிலையில் அவர் ரூ.5 இலட்சத்திற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அது தொடர்பான விமர்சனம்….

இவ்வளவு நாட்கள் நடந்த பிக்பாஸ்ல பக்கா ஸ்க்ரிப்ட்ன்னு மதுமிதா வனிதா தமிழ் பொண்ணு சார்ந்த சண்டைகள் இருந்தது.
அதுக்கப்புறம் நேத்து கவின் போனது அப்படித்தான் தோணுச்சு.முந்தாநாள் அவ்ளோ ஜாலியா கேலியா சந்தோஷமா இருந்த ஆறு பேர்ல ஒருத்தன் போறேன்னு சொன்னா அவனை எப்படிவெளில போக அனுமதிக்க முடியும். எப்படி பக்கம் பக்கமா எல்லாரும் டயலாக் பேச முடியும்…

நான் அந்த இடத்துல இருந்தேன்னா ஓங்கி அறைஞ்சு விளக்கமாத்துல அடிச்சாவது இல்ல உக்கார்டா கேம் முடிச்சிட்டு நீ கிளம்பு…மக்கள் உன்னை வெளியே தள்ளட்டும் அதுவரை நீ பொத்திட்டு இரு ன்னு உக்கார வைப்பேன்…அதான் நட்பிஸம்…அன்பிஸம்…ஏன் பிக்பாஸ்ட்ட க்ரூப்பா நாங்க ப்ரண்ட்ஸ் அனுமதிக்கலன்னாவது பேச்சு வார்த்த நடத்திருக்கலாம்…
கவின் கன்வின்ஸ்லாம் ஏத்துக்க முடியாது ஒன்னு…லாஸ்லியா அழுவுது..

ஷெரீன் அவங்க வீட்டு நாய்க்குட்டி போறதா இருந்தாலும் ஓகே பேபி நீ போய்ட்டு சீக்ரம் வா. நான் வெய்ட் பண்றேன்னு சொல்ற டைப்.அடுத்தவங்க உணர்வுக்கு முக்கியம் தரேன்னு அமைதியாய்டும்.

தர்ஷன் முகேன் யாரும் சரியான கருத்துக்களை வைச்சு பேசவும் இல்ல.

சாண்டி கவின் பேசறது கேட்டு அமைதியா இருக்கான்.அழறான்….ஏன் இவன் இவ்ளோ சாத்வீகமா இருக்கான்னுதான் தோணுச்சு.

சாண்டி தர்ஷன் முகேன் லாஸ்லியா ஷரீன் இந்த அஞ்சு பேருமே கவின் இப்பவே வார இறுதிக்கு முன்னாடியே வெளியே போனாதான் நாம இறுதிப்போட்டிக்கு போவோம்ன்ற எண்ண ஓட்டம் இல்லாதவங்கதான்.ஜாலியா விளையாடுவோம்ன தான் இவ்ளோ நாள் இந்த க்ரூப் இருந்தது.

அஞ்சு லட்சத்துக்கு ஓடற டைப் கவின் இல்ல.ஆனா அதையே காரணமா வைச்சு கவினை வெளியே அனுப்பிட்டாங்க இந்த பிக்பாஸும் விஜய் டிவியும்…

யாரை ஜெயிக்க வைக்க இந்த ப்ளான்னு தெர்ல…என்னமோ இதான் உன் கேரக்டர்…நடி கவின். நாங்க கூப்டறப்போ நீ வெளியில வா ன்னு அக்ரிமண்ட்ல சைன் போட்டமாறி கவின்ட விஜய் டிவி நடந்துக்கிச்சோன்னு தோண வைச்சது….

இதுலாம் மன அரசியல்.மைண்ட் கேம். நாம கத்துக்கனும்.

Related Posts