சினிமா செய்திகள்

காலா டிரெய்லர் எழுப்பும் கேள்விகள்

இன்று வெளியிடப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் முன்னோட்டம் எப்படி இருக்கிறது?

ஒன்றரை நிமிட முன்னோட்த்தில், காலா யார்? என்று ஒரு சிறுமி கேட்கிறார். அதற்கு வில்லன் சொல்லும் பதில், இராவண்.

உடனே ஒற்றைத் தலை இராவணன் என்கிற பாடல் ஒலிக்க ரஜினி சண்டை போடுகிறார்.

ராமராஜ்யம் கேட்போரோடு நட்பாக இருக்கும் ரஜினி, தன்னை இராவணனாக உருவகப்படுத்துவது ஏன்?

அடுத்து, இந்த உடம்புதான் நம்ம ஆயுதம், இத இந்த உலகத்துக்கு தெரியப்படுத்துவோம் திரட்டுங்க மக்களை என்கிறார் ஆவேசமாக.

ஆன்மீக அரசியல் என்று அறிவித்தவர் மக்களைத் திரட்டிப் போராட அழைப்பது ஏன்?

நிலம் உங்களுக்கு அதிகாரம் நிலம் எங்களுக்கு வாழ்க்கை என்று அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாகப் பேசும் ரஜினி, நிஜத்தில் நில மீட்புப் போராட்டங்களை ஆதரிக்கிறார்?

என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இன்னொரு பக்கம் இது சினிமா, இதில் அவர் பேசும் வசனங்களை நிஜத்தோடு ஒப்பிடத் தேவையில்லை என்கிற குரல்களும் கேட்கின்றன.

மொத்தத்தில் இந்த முன்னோட்டம் பார்க்கும்போது ரஜினி நிஜத்தில் பேசுவதற்கு நேரெதிராகப் படம் இருக்கும் என்பது தெரிகிறது.

Related Posts