சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் நட்டி பிரியாபவானிசங்கர் கூட்டணியில் புதியபடம்

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின.

தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள்.

இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ்,ஜீ 5,ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது.

இதனால் இந்நிறுவனங்கள் பல பெரிய படங்கள் உட்பட நிறையப் படங்களை ஒளிபரப்பப் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன.

இவற்றில் சன் நெக்ஸ்ட் நிறுவனம் ஒருபடி மேலே போய், நேரடியாக இணையம் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வண்ணம் முழுநீளத் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.

சுந்தர்.சி தயாரிப்பில் ஒரு படம் மற்றும் விக்ரம்பிரபு நடிப்பில் ஒரு படம் ஆகியனவற்றை சன் நெக்ஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அமேசான், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புகழ்பெற்ற இயக்குநர்களின் குறும்படங்களை ஒருங்கிணைத்து ஆந்தாலஜி வகைப் படங்களைத் தயாரித்து ஒளிபரப்பவிருக்கின்றன.

இந்நிலையில் ஹாட்ஸ்டார் நிறுவனமும் நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிட ஆந்தாலஜி வகைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

பா.இரஞ்சித், வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபல இயக்குநர்களை வைத்து ஆந்தாலஜி படம் தயாரிக்கிறது.

அவற்றில் ஒரு குறும்படத்தில்,ஒருகல் ஒருகண்ணாடி மற்றும் மிஸ்டர் லோக்கல் உட்பட பல படங்களை இயக்கிய எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஒரு குறும்படம் தயாராகியிருக்கிறது.

இக்குறும்படத்தில் நட்டி கதாநாயகனாகவும் பிரியாபவானிசங்கர் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுமையாகத்்தயாராகிவிட்டதாம்.

Related Posts