சினிமா செய்திகள்

இந்திக்குப் போகிறார் லிங்குசாமி

விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளீயானது. அப்படம் வெளியாகி முழுமையாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன.

ஆனாலும் இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
அடுத்து அவர் ராகவாலாரன்ஸ் நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அதற்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போதும் அவர் ஒரு புதியபடத்துக்கான திரைக்கதை விவாதத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அது இந்திப்படம் என்றும் சொல்கிறார்கள். 

ஆம், இந்தியில் அபிஷேக்பச்சன் நாயகனாக நடிக்கும் புதியப்டமொன்றை இயக்க லிங்குசாமி ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவர் சொன்ன கதை அபிஷேக்பச்சனுக்குப் பிடித்துவிட்டது. அதனால் அதற்கு முழுமையான திரைக்கதை அமைக்கும் பணியில்தான் இப்போது ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

எல்லாம் சரியாக அமைந்தால் நேரடி இந்திப்படம் இயக்கப் போகிறார் லிங்குசாமி.

Related Posts