நயன்தாராவைத் தொடர்ந்து சமந்தாவும் நிராகரித்தார்
துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.கதாநாயகியை மையப்படுத்தி ஒரு கதையை எழுதியிருக்கிறாராம்.
காவு என்று பெயரிடப்பட்ட அந்தக்கதையில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும என நினைத்து அவரைச் சந்தித்து கதை சொன்னாராம்.கதையைக் கேட்டுவிட்டு சில நாட்களுக்குப் பின், இந்தக் கதை எனக்குச் சரியாக இருக்காது என்று சொல்லி நிராகரித்துவிட்டாராம்.
அதன்பின் சமந்தாவை நாயகியாக்கி அந்தப்படத்தை எடுக்க முயன்றாராம் மிஷ்கின். ஆனால் அவரோ கொரோனா சிக்கல் முடிவடைந்த பின்புதான் படம் நடிப்பது பற்றி முடிவெடுக்க முடியும் என்று சொல்லி நிராகரித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.











