சினிமா செய்திகள் நடிகை

ஓவியாவின் கருத்தால் பிக்பாஸ் 2 க்கு மேலும் பின்னடைவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், நித்யா, பாலாஜி, மஹத், ஷாரிக் ஹாசன், அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, மும்தாஜ், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சென்றாயன், டேனியல், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, ரித்விகா ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர்.

இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, ஷாரிக் ஹாசன், பொன்னம்பலம், வைஷ்ணவி ஆகிய 7 பேர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேசமயம், நடிகை விஜயலட்சுமி புதிய போட்டியாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், இயல்பாக நடந்து கொண்டதால் பெரும்பாலானவர்களின் ஆதரவு ஓவியாவுக்கு கிடைத்தது. ‘ஓவியா ஆர்மி’ கூட உருவானது. அவர் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்தார் ஓவியா.

அப்போது, பிக் பாஸ் 2 பற்றி உங்கள் கருத்து என்ன? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், நான் ‘பிக் பாஸ் 2’ பார்ப்பதில்லை என்று தெரிவித்தார் ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் இடத்தை நிரப்ப யாரும் இல்லை. மும்தாஜ், அவருடைய பாணியில் நன்றாக விளையாடுகிறார். ஆனால், ஓவியா தான் லெஜண்ட் என்று ஒரு ரசிகர் சொல்ல, எல்லாருமே நல்லவர்கள் தான். நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார் ஓவியா.

ஏற்கெனவே பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு இல்லை. இந்நிலையில் ஓவியாவும் இப்படிச் சொல்லியிருப்பது அந்நிகழ்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

Related Posts