சூர்யாவின் நற்செயல் – ரசிகர்கள் வரவேற்பு
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23 அன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட, மாநில அளவில் பரப்புரையைத் தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பரப்புரையின் விளம்பரத் தூதர்களாக சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விவேக் ஆகிய நால்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்புக்கான விளம்பரத்தில் நடிக்க இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
அரசாங்கம் மேற்கொள்ளும் மக்கள் நலத்திட்டம் ஒன்றிற்காக சூர்யா,ஜோதிகா, கார்த்தி, விவேக் ஆகியோர் விளம்பரத் தூதர்களாகியிருப்பதால் அவர்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் ஆதரவும் அதிகரித்திருக்கிறது.











