சினிமா செய்திகள்

விஸ்வாசம் விவகாரம் – அஜீத் உத்தரவு நயன்தாரா அதிர்ச்சி

சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் அஜீத் மட்டும்தான் இருக்கிறார். பட நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களில்தான் இந்த நிலை.

இதனால் படத்தின் நாயகி நயன்தாரா கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம்.

படத்தில் அவருடைய வேடத்துக்கும் நடிப்புக்கும் மிகுந்த நற்பெயர் கிடைத்திருக்கும் நேரத்தில் விளம்பரங்களில் அவருடைய படத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது அவருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

நயன்தாராவையும் சேர்த்து சில விளம்பர வடிவமைப்புகள் செய்ததாகவும் அவற்றைப் பார்த்த அஜீத், நயன்தாரா படம் எங்கும் இடம்பெறக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விசயம் தெரிந்து நயன்தாரா அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts