February 12, 2025
சினிமா செய்திகள்

கதை நிராகரிப்பு – திகைப்பில் தனுஷ்

தனுஷ் இப்போது செல்வராகவன் இயக்கும் நானேவருவேன், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றிற்கடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதோடு பிரபல நிதியாளர் மதுரை அன்பு தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவற்றில் மதுரை அன்பு தயாரிக்கும் படத்தை முதலில் இளன் இயக்குவதாக இருந்ததாம். ஆனால் அவரை வேண்டாம் என சொல்லிவிட்டு தானே எழுதி இயக்கப் போவதாக தனுஷ் கூறியுள்ளார்.

மதுரை அன்புவும் அதை ஒப்புக்கொண்டாராம். அதற்காக தனுஷ் சொன்ன ஒருவரிக்கதையைக் கேட்டு சம்மதம் சொல்லியிருக்கிறார்.

அதன்பின் முழுமையான திரைக்கதையைக் கேட்டபோது அது தயாரிப்பாளர் மதுரை அன்புவுக்குத் திருப்தியாக இல்லையாம். எனவே அதை முற்றாக நிராகரித்துவிட்டாராம்.திகைத்துப் போனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள இயலாத நிலை தனுஷுக்கு.

அதனால், இப்போது வேறு இயக்குநர்களிடம் கதை கேட்கும் படலம் நடந்துகொண்டிருக்கிறதாம். பொருத்தமான கதை அமைந்ததும் அந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts