அட்லி அடாவடி விஜய் கண்டுகொள்ளாதது ஏன்? தயாரிப்பு நிறுவனம் கொதிப்பு
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
2019 ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இப்படம் தொடங்கும்போதே குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் முடித்துவிட வேண்டும் என்று இயக்குநர் அட்லீயிடம் சொல்லியிருந்தார்களாம்.
ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் ஏகத்துக்கும் செலவை இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாராம் அட்லி. இதனால் படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அதிர்ச்சியடைந்திருக்கிறதாம்.
இந்தப்படத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையைவிட சுமார் ஐம்பது கோடி வரை அதிகம் செல்வாகும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே அட்லியை வைத்துப் படமெடுத்த ஃபாக்ஸ் நிறுவனம் மீண்டும் படமெடுக்கவில்லை,அட்லீயின் அடுத்த படத்தை எடுத்த கலைப்புலிதாணுவே அவரைப் பார்த்து மிரண்டார். அதற்கடுத்த படமான மெர்சல் எடுத்த தேனாண்டாள் நிறுவனத்தின் நிலை எல்லோருக்கும் தெரிந்தது.
இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறதாம். தயாரிப்பில் இருக்கும்போதே அந்நிறுவனம் விழித்துக்கொண்டதால், செலவு அதிகமாக நான் காரணமில்லை, தயாரிப்பு நிறுவனத்தின் ஆட்கள்தாம் செலவை அதிகமாகக் காட்டி கமிஷன் அடிக்கிறார்கள் என்று அட்லி குற்றம் சொல்ல கொதித்துப் போயிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.
இதனால் போட்ட பட்ஜெட்டுக்கு போல் போனால் படத்தைத் தொடருவது பற்றி யோசிக்கவேண்டும் என்கிற அளவுக்கு தயாரிப்பு நிறுவனம் கோபமாக இருக்கிறதாம்.
அட்லி மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்குமிடையேயான யுத்தம் தொடங்கி உக்கிரமடைந்து கொண்டிருந்தாலும் இதுபற்றி நாயகன் விஜய் கண்டுகொள்ளவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
விஜய், அட்லியை ஆதரிப்பதால்தான் அவர் ஆட்டம் போடுகிறார். தயாரிப்பாளர்கள் நலன்விரும்பும் விஜய் இந்த விசயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என்பது விசயமறிந்தவர்களின் கேள்வியாக இருக்கிறது.











