சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா பிறந்தநாளைக் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

சூர்யாவின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நற்செயல்களுடன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருப்பதாக சூர்யா ரசிகர் மன்றத்தினர் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திர மாநிலங்களிலும் பிறந்தநாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன .

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் பலவற்றிலும் அவருடைய பிறந்தநாள் விழாக்கள் நடக்கின்றன.

இவற்றைவிட சிறப்பாக, சூர்யாவின் பிறந்தநாளை அஜீத் ரசிகர்கள் கொண்டாடிவரும் நிகழ்வும் நடக்கிறது.

ஹேப்பி பர்த்டே சூர்யா பை அஜித்ஃபேன்ஸ் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யாவைப் போட்டியாக நினைக்காமல் அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்வது நல்ல விசயம்.

Related Posts