சினிமா செய்திகள்

சூர்யா 42 படத்தின் பெயர் இதுவா? – பரபரக்கும் தகவல்

ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

வரலாற்றுக்காலம் மற்றும் தற்காலம் ஆகியனவற்றோடு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

பத்து மொழிகளில் தயாராகிறது என்று சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் பெயர் என்ன என்பதை ஏப்ரல் 16,2023 அன்று காலை 9 மணி 5 நிமிடத்தில் அறிவிப்பதாக ஏப்ரல் 11 அன்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அப்போதிருந்து இந்தப்படத்தின் பெயரென்ன? என்கிற ஆர்வமும் விவாதமும் சூடுபறக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பெயர் குறித்து உலவும் பல தகவல்களில் ஒன்று என்னவென்றால்? இப்படத்துக்கு கங்குவா (Gangvaa) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது எனும் தகவலும் ஒன்று.

1984 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான படம் கங்குவா. ரஜினிகாந்த், சபனா ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் மலையூர் மம்பட்டியான் படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பெயரைத்தான் இப்போது சூர்யா 42 படத்துக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் தென்னிந்திய மொழிகளை விட வட இந்தியாவில் இந்தப்படத்தைப் பெரிதாகப் பேச வைக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இந்தப்பெயரை வைக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏப்ரல் 16 அன்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இது அதிகாரப்பூர்வமன்று.

Related Posts