சினிமா செய்திகள்

நயன்தாரா அழைப்பு ரஜினி ஏற்பு

பாரதிராஜா,வசந்த்ரவி,ரவீனாரவி,ரோகிணி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு தர்புகாசிவா இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தை ஆர் ஏ ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடமிருந்து வாங்கி விக்னேஷ்சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தைச் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.

படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டிப்பேச வேண்டும் என்று நயன்தாரா அழைப்பு விடுத்தாராம். அதை ஏற்றுக் கொண்டு படம் பார்த்துப் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

இதனால் படக்குழு உற்சாகமாகியிருக்கிறதாம்.

 

Related Posts