யாஷிகாவுக்கு ஆதரவாக நடிகை போர்க்கொடி – ரசிகர்கள் வரவேற்பு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இன்னும் ஐஸ்வர்யா ஏன் வெளியேற்றப்படவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாஷிகாவின் வெளியேற்றம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
யாஷிகா வெளியேற்றம் தொடர்பாக நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிக்பாஸ் வீட்டிலிருந்து யாஷிகா வெளியேற்றப்படுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. யாஷிகா போலித்தன்மை இல்லாத குழந்தை. வாழ்த்துகள் பெண்ணே.
விஜய் டிவி என்னை நிறைய முறை ஏமாற்றியிருக்கிறது. சூப்பர் சிங்கரில் சத்யபிரகாஷ் தோல்வியுற்றது. இந்த சீசன் சூப்பர் சிங்கரில் ஸ்ரீகாந்த் வெற்றி பெறாமல் போனது! சூப்பர் சிங்கர் போட்டி என்றால் அதில் பாடகர்கள் நுணுக்கமான திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் தானே? ம்ம்ம்ம்.. அது போன்றதே யாஷிகாவின் வெளியேற்றமும்.
இவ்வாறு ஸ்ரீப்ரியா தெரிவித்திருக்கிறார்.
ஶ்ரீபிரியாவின் இந்தக் கருத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.











