நடிகர் விஷாலுக்கு கொரோனா – நலம் பெற்றதாக அறிவிப்பு
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தமிழ்த்திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் விஷால் மற்றும் அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது.
இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது……:
ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல் இருந்தது. என் மேலாளருக்கும் அப்படியே.
நாங்கள் அனைவரும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டோம். ஒரே வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியே வந்தோம். தற்போது நாங்கள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் உள்ளோம்
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.











