விஜய் ஆண்டனி மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கியது ஏன்?
2005 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் 2012 இல் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.
அதன்பின்,அவருடைய தயாரிப்பில் ’சலீம்’, ’இந்தியா – பாகிஸ்தான்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’எமன்’, ’அண்ணாதுரை’, ’காளி’ மற்றும் ’திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார்.
இவற்றில் பிச்சைக்காரன் படம் தவிர மற்ற அனைத்தும் தோல்வி.இதனால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார் என்று சொல்லப்பட்டது.
இதனால், 2018 இல் வெளியான திமிரு புடிச்சவன் படத்துடன் தனது படத் தயாரிப்பைக் கைவிட விஜய் ஆண்டனி முடிவு செய்தார். மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மட்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சொன்னார்.
அக்னிச் சிறகுகள்,தமிழரசன்,காக்கி உட்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஜூலை 24,2020 அன்று விஜய் ஆண்டனி பிறந்த நாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 பட அறிவிப்பு வெளியானது.
இந்தப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். நடிப்பு, படத்தயாரிப்பு, பட வெளியீடு உள்ளிட்ட விஷயங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்லி படத்தயாரிப்பைக் கைவிட்ட விஜய் ஆண்டனி மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கியது ஏன்?
விஜய் ஆண்டனி தற்போது நடிக்கும் படங்களின் வேலைகள் தடைபட்டிருப்பதால் அவற்றிலிருந்து பணம் எதுவும் அவருக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் அன்றாடச் செலவுகளுக்கே கஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம்.படத்தயாரிப்பில் இறங்கினால் கொஞ்சம் பணம் புரளும், கஷ்டங்களிலிருந்து மீளலாம் என்பதால் மீண்டும் அவர் படத்தயாரிப்பில் இறங்கியதாகச் சொல்லப்படுகிறது.











