சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் – விஜய் ஆண்டனி அறிவித்த படம் இதுதான்

திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், நேற்று மாலையில்,

என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும்,
என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன்.
நம்பிக்கையுடன்
நான்

என்று நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட் செய்திருந்தார்.

அவருடைய இந்த ட்வீட்டுக்கு பெருமளவில் ஆதரவு குவிந்தது.

எந்தப்படம் என்று அவர் குறிப்பிடவில்லை என்றாலும் அது பற்றிய விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

விதார்த் நடிப்பில் வெளியான ‘ஆள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த கிருஷ்ணன். 2014 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு ‘மெட்ரோ’ என்ற படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் க்ரைம் படமான இது பரவலான கவனத்தைப் பெற்றது.

அதன் பின்னர், அசோக் செல்வனை வைத்து ‘ஆக்ஸிஜன்’ என்ற படத்தைத் தொடங்கினார் ஆனந்த கிருஷ்ணன். ஆனால், சில பிரச்சினைகளால் அந்தப் படம் பாதியிலேயே நிற்கிறது.

அந்த ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில்தான் விஜய் ஆண்டனி கலந்துகொள்கிறார்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் என்கிற படநிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.

Related Posts