சினிமா செய்திகள்

புதிய படம் அறிவித்தார் தனுஷ்

தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மித்ரன்ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படமும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23,2021) வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளார்.

இந்தப்படத்தைத் தயாரிக்கப் போவது யார்? என்கிற விவரம் வெளியிடப்படவில்லை.

Related Posts