விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால் மாறும் பிகில் ரிலீஸ் தேதி
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது
படக்குழு.
இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது.
வழக்கமாக தீபாவளி நாளன்றே படத்தை வெளியிடுவதுதான் விஜய்க்கு விருப்பம்.
இம்முறை தீபாவளி ஞாயின்று வருவதால் அதற்கு முந்தைய
(அக்டோபர் 24 ஆம் தேதி) வியாழன் அன்றே படத்தை வெளியிடலாம் என்று பட நிறுவனம் விரும்பியதாம்.
விஜய்க்கு அதில் விருப்பமில்லை, அதே சமயம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவதற்கு வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
அதனால் படம் அக்டோபர் 25 வெள்ளியன்று வெளியாகவிருக்கிறதாம்.
அந்த அறிவிப்பை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடவிருக்கிறார்களாம்.











