சினிமா செய்திகள்

மிஷ்கின் சிம்பு கூட்டணி உறுதியானது ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஷாலுன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்.

அடுத்து மிஷ்கின் என்ன செய்யப்போகிறார்? என்கிற கேள்விக்கு விடையாக சிம்புவை வைத்து புதியபடம் தொடங்கப்போகிறார் என்றார்கள்.

மிஷ்கின் சிம்பு இருவரும் இணைவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு வந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறதாம். சிம்புவிடம் ஒரு கதையை மிஷ்கின் சொல்லியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் விரைவில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும் என்று சொல்லியிருந்தார்கள்.

இப்போது அது உறுதியாகியிருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதியபடத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதென்கிறார்கள்.

ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த யுத்தம்செய் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பைத் தொடங்குகிற அளவுக்கு மிஷ்கின் தயாராகிவிட்டாராம்.

சிம்புவுன் மாநாடு படப்ப்பிடிப்பைப் பொறுத்து இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்படும் என்கிறார்கள்.

Related Posts