Uncategorized சினிமா செய்திகள்

அனிருத்தின் அடாவடி – கொலைவெறியில் விக்ரம் படக்குழு

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில்,நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படவெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வெளிநாடுகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக படம் அனுப்பவேண்டும்.

ஆனால், அனிருத் இன்னமும் பின்னணி இசைச் சேர்ப்பை முடிக்கவில்லையாம்.சில நேரங்களில் படக்குழுவினர் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடுகிறாராம்.

இயக்குநரின் சிந்தனைக்கேற்ப பின்னணி இசை அமைந்திருக்கிறதா? என்று பார்ப்பதற்கான வாய்ப்பை அனிருத் கொடுக்கவே இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் அனிருத் மேல் கொலைவெறியில் இருக்கிறார்களாம்.

ஆனாலும் என்ன செய்யமுடியும்? அவர் கொடுக்கும்வரை காத்திருந்துதான் ஆகவேண்டும் என்கிற நிலையில் அனிருத் வாசலில் தவம் கிடக்கிறார்களாம்.

அவருடைய பின்னணி இசை இயக்குநர் எண்ணத்துக்குப் பொருத்தமாக இல்லையென்றால் திருத்தங்கள் சொல்லும் காலமெல்லாம் கடந்துவிட்டதாம்.

எப்படியாவது மொத்தமாக முடித்து உரிய நேரத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டால் போதுமென வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.

படத்தின் விளம்பரத்துக்காகப் பறந்துகொண்டிருக்கும் கமல், அவ்வப்போது பதட்டத்துடன் இதை விசாரிக்கும்போது இங்குள்ளவர்களும் பதட்டம் அடைந்துகொண்டிருக்கிறார்களாம்.

இதுதான் அனிருத்தின் உத்தி. அவர் இசையில் திருத்தங்கள் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே கடைசிநேரம் வரை இழுத்தடிப்பார். கடைசியில் எப்படியாவது முடித்து அனுப்பினால் போதுமென்ற மனநிலைக்குப் படக்குழுவினர் வரும்போது முடித்துக்கொடுப்பார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் வெற்றி பெறுவதால் அவர் இவ்வளவு ஆட்டம் போடுகிறார். ஆனாலும் கமல் போன்ற மூத்த நடிகர்கள் படத்திலும் அவர் இதே வேலையைச் செய்வது அவரை அவமதிப்பதாகாதா? என விசயமறிந்தவர்கள் கோபப்படுகின்றனர்.

இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளக் கூட அனிருத் தயாரில்லை என்பதுதான் உண்மை.

Related Posts