பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் பெயர்?
பாலா இயக்கத்தில் சூர்யா,தெலுங்கின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி, அறிமுகநாயகி மமிதா உட்பட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.
இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது.
இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.
இந்நிலையில், அப்படம் நின்றுவிட்டது இனி அவ்வளவுதான் என்று வந்த பொய்ச்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறேன் என்று சூர்யா அறிவித்தார்.
அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக கோவா செல்லவிருக்கிறதாம் படக்குழு. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கின்றனர்.
தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்கிற விவாதம் நடந்துகொண்டிருக்கிறதாம்.
வணங்கான் என்கிற பெயரும் கடலோடி என்கிற பெயரும் இறுதிச்சுற்றில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இவ்விரண்டில் ஒன்றுதான் படத்தின் பெயராக இருக்குமென்கிறார்கள். பார்ப்போம்.











