சினிமா செய்திகள்

விடுமுறை மற்றும் உலகக் கோப்பையை மீறி வரவேற்புப் பெற்ற ஆதித்ய வர்மா – விக்ரம் மகிழ்ச்சி

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதனை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியிருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

அதோடு, இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘ஆதித்ய வர்மா’ என்ற பெயருடன் இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி பட இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ராதான் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜூன் 16 காலை 11 மணிக்கு ஆதித்ய வர்மா படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டாவது முறையாக எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கும் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு.

நேற்று விடுமுறை நாள் மட்டுமின்றி உலகக் கோப்பை மட்டைப்பந்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடந்தது.

இவற்றை மீறி இப்படத்தின் டீசரை 23 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

இது மிகப்பெரிய வரவேற்பு என்பதால் துருவ் விக்ரம் மற்றும் விக்ரம் ஆகியோர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

டீசரைக் காண….

Related Posts