சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷாலுடன் நடிக்கிறார் அதிதிஷங்கர் – விவரங்கள்

விஷ்ணுவிஷால் நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லால்சலாம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தில், விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடித்த முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கவிருக்கும் புதியபடத்திலும் மீண்டும் விஷ்ணுவிஷால் நடிக்கவிருக்கிறார்.அந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குநர் ராம்குமார். பல்வேறு காரணங்களால் அந்தப்படம் நடக்கவில்லை.

அதனால் மூன்றாவது முறையாக ராம்குமார் விஷ்ணுவிஷால் கூட்டணி அமைந்துள்ளது.

இந்தப்படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

அதற்குள் லால்சலாம் படம் நிறைவடையாது என்றாலும் இரண்டு படங்களிலும் மாற்றி மாற்றி விஷ்ணுவிஷால் நடிப்பார் என்கிறார்கள்.

ராம்குமார் விஷ்ணுவிஷால் ஆகியோர் இணைந்த முந்தைய இரண்டு படங்களுமே வெற்றி என்பதால் மூன்றாவதாக இணையும் இந்தப்படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Related Posts