உதயநிதி ஜோடியாக கீர்த்திசுரேஷ் – வற்புறுத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன்?
உதயநிதி இப்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப்படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.சென்னையில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதன்பின் சேலம் பகுதிகளில் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இப்படம் மிக வலிமையான அரசியலைப் பேசுகிற படமாக இருக்கும் என்கிறார்கள்.
உதயநிதியின் எதிர்கால அரசியலுக்கு இப்படம் பெரிதும் உதவியாக இருக்குமென்றும் சொல்கிறார்கள்.
அதனால்தான் இந்தப்படத்தில் பங்குபெறும் எல்லோரும் முதல்நிலையில் இருப்பவர்களாக வேண்டும் என்பதற்காகவே தேடித்தேடி ஏ.ஆர்.ரகுமான், கீர்ததி சுரேஷ், வடிவேலு ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
அதிலும் கீர்த்தி சுரேஷ் தேதிகள் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவரை வற்புறுத்தி இந்தப்படத்தில் நடிக்க வைக்கிறார்களாம்.
இப்படத்தில் பேசப்படும் விசயங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்பதற்காகவே அவர் உட்பட பலரை வற்புறுத்தி ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
நல்ல விசயத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று நினைப்பது தப்பில்லையே.











