தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடல் எழுதவில்லை என்று யார் அழுதது? – அரபிக்குத்துக்கு எதிர்ப்பு
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட்.அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் ஒருபாடல் காணொலி பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. அரபிக்குத்து எனத் தொடங்கும் அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன.சமூகவலைதளங்களில் பரவலாக வந்துகொண்டிருக்கும் எதிர்ப்புப் பதிவுகளில் ஒன்று.
சுரேஷ்கண்ணன் என்பவர் எழுதியிருக்கும் அப்பதிவில்….
அரபிக் குத்து பாடல் பார்த்தேன். ‘ரவுடி பேபி’யை அழுத்தமாக நினைவுப்படுத்தும் beat. அனிருத் சமயங்களில் நல்ல மெலடிகளையும் துள்ளலிசைப்பாடல்களையும் தருவதால் மன்னிக்க வேண்டியதாக இருக்கிறது. மற்றபடி மிக்ஸியை ஹைஸ்பீடில் ஓட விட்டது போலவே நாராச சப்தங்களுடன்தான் பெரும்பாலான பாடல்கள் வருகின்றன.
தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் எல்லாம் பாடல் எழுதவில்லையென்று யார் அழுதது? சிகா பாடலுக்கு வாங்கும் சம்பளம், நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்குச் செல்கிறது என்று சிலர் உணர்ச்சி வசப்படுகிறார்கள். மறைந்த கவிஞருக்கு உதவி என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதை தனியாகச் செய்யலாம். ஒரு மொழியின் கழுத்தை இறுகப்பிடித்து விட்டுத்தான் பரோபகாரம் செய்ய வேண்டுமா?
விஜய் ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டில் பல நூற்றாண்டுகளாக நடிக்கிறார். அவருக்கு சலிக்காமல் இருக்கலாம். கோடிகளில் சம்பளம் வருகிறது. ஆனால் ரசிகர்களுக்கும் இந்த அரைத்த மாவு அலுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
தமிழ் சினிமா இப்போதைக்கு உருப்பட வாய்ப்பேயில்லை என்பதற்கான துல்லியமான அடையாளம் இந்த அரபிக் குத்து.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.
அவருடைய இந்தப்பதிவுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கின்றன.
அரபிக்குத்து பாடல் கேட்க….











