September 23, 2026
சினிமா செய்திகள் நடிகர்

மன்சூரலிகானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீமானை வெளியில் விடாமல் வேறொரு வழக்கில் கைது செய்ய முற்பட்டது காவல்துறை.

அதற்கு எதிராக்க் குரல் கொடுத்த நடிகர் மன்சூரலிகானைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

கடந்த எட்டுநாட்களுக்கும் மேலாகச் சிறையிலிருக்கும் மன்சூரலிகானை விடுதலை செய்யக்கோரி ஏப்ரல் 21 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு காவல்துறை ஆணையர் அலுவலகம் செல்லவிருப்பதாக நடிகர் சிம்பு அறிவித்திருக்கிறார்.

மன்சூரலிகானுக்கு ஆதரவாக சிம்பு செயல்படுவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Related Posts