சினிமா செய்திகள்

ஜனநாயகன் எப்போதும் வராது? – அதிரவைக்கும் புதியதகவல்

பல்வேறு சிக்கல்களைக் கடந்து ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கிறது.

ஜூன் 22 விஜய் பிறந்தநாள் என்பதால் அதையொட்டி அதற்கு முந்தைய வியாழக்கிழமையான ஜூன் 18 அன்று படம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இப்போது அதுவும் நடக்காது என்கிற தகவலோடு இனி எப்போதும் அந்தப்படம் வெளியாகாது என்கிற அதிர்ச்சித் தகவலும் உலவிக்கொண்டிருக்கிறது.

ஏன்?

தணிக்கை வாரியம் சான்றிதழ் தராததால்தான் படம் வெளியாகவில்லை என்பது ஊரறிந்த செய்தி.

தணிக்கை வாரியம் கோரிய திருத்தங்களை எல்லாம் செய்து கொடுத்த பின்பும் சான்றிதழ் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது தணிக்கை வாரியம்.

இதற்கிடையே விஜய் முதல்வராகிவிட்டதால்,உடனே தணிக்கை வாரியம் ஓடோடி வந்து சான்றிதழ் கொடுத்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள்.

மாநில அரசின் அதிகாரத்தைவிட தணிக்கை வாரியத்தின் அதிகாரம் பெரிது என்பது இதன்மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் விஜய் முன் எந்த அதிகாரமும் செல்லாது என்கிற அவருடைய ஆதரவாளர்களின் அதீத நம்பிக்கை பொய்த்துப்போனது.

இந்நிலையில்,அண்மையில் விஜய்யை சந்தித்துவிட்டு வந்த பின்பு தன் படமான நூறுசாமிகள் படம் ஜூன் 19 வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார் விஜய்ஆண்டனி.

இதனால்,ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகாது என்பது உறுதியானது.

இந்தப்படத்தைத் திரையரங்குகளில் பல விநியொகஸ்தர்களிடம் வெளியிட ஒப்பந்தம் போட்டு பல கோடிகள் முன்பணமாகப் பெற்றிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலைமை நீடிக்கிறது.

இது ஒரு பெரிய சிக்கலாக உருமாறும் எனும் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.

இதையறிந்த தயாரிப்பு நிறுவனம்,பணம் கொடுத்த விநியோகஸ்தர்களை அழைத்திருக்கிறதாம்.

அந்த விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்படிச் செய்யவேண்டும் விஜய்தான் அறிவுறுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

விஜய்யே இப்படிச் சொல்லியிருப்பதால் இந்தப்படம் எப்பவுமே வெளிவராது என்கிற தகவலுக்கு ரெக்கை முளைத்திருக்கிறது.

இந்த முடிவுக்கு வர இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது என்கிறார்கள்.

அது என்னவெனில்?

தணிக்கைச் சான்றிதழ் கோரி தணிக்கை வாரியத்தை பலமுறை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் அதற்கு தணிக்கை வாரியம் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லையாம்.

எனவே,அதற்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு படக்குழு வந்திருக்கிறது என்கிறார்கள்.

Related Posts