சினிமா செய்திகள்

ஓவியா பற்றி ஆரவ் பேச்சு – பரபரப்பு ஆரம்பம்

பிக்பாஸ் முதல் பகுதியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது செய்தியானது.

இதுபற்றி ஆரவ்விடம் கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன்.

ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர்.
ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

அவர் இப்படிச் சொன்னாலும் இருவரும் சேர்ந்து படம் நடிப்போம் என்று சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts