சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் – சிம்பு உறுப்பினரானார்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் சொன்னார் டி.ராஜேந்தர். அது தொடர்பாகப் பதிவாளர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார்.

அதோடு நில்லாமல், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.

அதுபோலவே இன்று அந்தச் சங்கத்தின் அறிமுகவிழா நடைபெற்றது. அதையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…..

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா

திரு டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா இன்று (டிசம்பர் 5,2020) நடைபெற்றது

தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – என்.சுபாஷ் சந்திர போஸ்
செயலாளர் – ஜேஎஸ்கே.சதிஷ் குமார்
பொருளாளர் – கே.ராஜன்
துணை தலைவர் – பி.டி.செல்வ குமார்
துணை தலைவர் – ஆர்.சிங்கார வடிவேலன்
இணை செயலாளர் -கே.ஜி.பாண்டியன்
இணை செயலாளர் – எம்.அசோக் சாம்ராஜ்
இணை செயலாளர் – சிகரம்.ஆர்.சந்திர சேகர்

1. புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்

2. விபிஎஃப் போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களைத் தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கித் தவிக்கும் சிறு படத் தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்க்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.

4. எஃப் எம் எஸ், சாட்டிலைட், ஓடிடி மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தைப் பெருக்கி இலாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாகப் பேசித் தீர்க்க ஆவண செய்வோம்.

தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், எஸ்டிஆர் பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்தச் சங்கத்தில் உறுப்பினராக இணைகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts