சினிமா செய்திகள்

சர்கார் பட வசனங்கள் – விஜய்க்கு நன்றி சொல்லும் மீனவர்கள்

இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படும் துன்பத்தை சர்க்கார் திரைப்படத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய நடிகர் விஜய் அவர்களுக்கும் இயக்குநர் திரு முருகதாஸ், தயாரிப்பாளர் திரு கலாநிதி மாறன் அவர்களுக்கும் நன்றி என்று பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ….

பரத நாட்டின் கடல் எல்லையை காக்கும் சம்பளம் வாங்காத காவல் வீரனாகவும், 50 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டித்தரும் பொருளாதார சக்தியாகவும், 20 கோடிப்பேருக்கு வேலைவாய்ப்பினை கொடுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் மீனவன் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் ஆனால் மத்திய மாநில அரசுகள் மீனவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறார்கள், எனவே மீனவர்கள் வாழ்வியலுக்காக கடலிலும்,கரையிலும் படும் துன்பங்களை கண்டுகொள்வதில்லை ,

மீனவர்கள் படும் துன்பங்களை மக்களிடம் எடுத்துச்செல்வதில் ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் திரைப்படம் முக்கிய பங்காற்றுகிறது, அந்த வகையில் திரு விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான “சர்க்கார்” திரைப்படத்தில் கதாநாயகன் விஜய் அவர்கள் தான் மீனவன் என்றும் மீனவன் மற்றவர்களுக்கு உதவும் குணம் உள்ளவன் என்றும் நாட்டை காக்க தன் உயிரையும் கொடுப்பான் என்று கருத்துக்களை கூறி மீனவர்களை பெருமைப்படுத்துகிறார் மேலும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வியலுக்காக கடலிலும் கரையிலும் படும் துன்பங்களை குறித்து குறிப்பிடுகிறார், குறிப்பாக இலங்கை கடற்படையால் படும் துன்பத்தை வெளிப்படுத்துகிறார். இது மீனவர்களுக்கு ஆறுதலை தருகிறது,

பல்வேறு நபர்கள் மீனவர்கள் குதித்து தவறான தகவல்களை பரப்பி வரும் நிலையில், மீனவர்கள் குறித்து நல்ல விதமாகவும், மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தனது சர்க்கார் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு சொன்ன இளைய தளபதி விஜய் அவர்களுக்கும், இயக்குனர் திரு A.R.முருகதாஸ் அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு கலாநிநி மாறன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் சர்க்கார் திரைப்படம் வெற்றியடைய மீனவர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts