சினிமா செய்திகள்

விஜய்யுடன் எட்டுநாட்கள் நடித்துவிட்டு விலகிய அஜீத் – வெளிப்படுத்திய இயக்குநர்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அதிலிருந்து….

நேருக்கு நேர்’ படம் மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில், அஜித், விஜய்யை வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டது. இருவரது காம்பினேஷனிலும் 8 நாட்கள் படப்பிடிப்பும் நடந்து விட்டது. நான் அந்தப்படத்தின் கோ டைரக்டர். சில காரணங்களால் அஜித் அந்தப்படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

அதற்கு பிறகு அவரது கேரக்டரில் நடிக்க வேறு ஒரு நடிகரை தேடும் படலம் நடந்தது. இறுதியாக சூர்யாவை தேடிக்கண்டு பிடித்து அறிமுகப்படுத்தினோம். (சூர்யாவை கண்டு பிடித்தது தனி கதை)

சூர்யாவை கண்டு பிடிக்கும் அந்த இடைவெளியில் மணிரத்னம் அவரது ‘இருவர்’ படத்தை ஆரம்பித்து விட்டார். அவரே, நேருக்கு நேர் மீண்டும் தொடங்கும் வரை, இருவரில் வந்து ஒர்க் பண்ணுங்கள் என அழைப்பு விடுத்தார்.

எத்தனையோ பேர் அவருடன் ஒர்க் பண்ண ஆபிஸ் வாசலில் காத்திருக்கும் போது, எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பு கசக்குமா என்ன? ஒப்புக்கொண்டு அவருடன் புறப்பட்டேன்.

முதல் நாள் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. நான் காலில் shoe இல்லாமல் வெறும் செருப்புடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதை கவனித்த மணிரத்னம் அன்று மாலையே புரடக்‌ஷன் மேனேஜரிடம் சொல்லி எனக்கு புது shoe வாங்கி கொடுத்தார்.

மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யாராய் என பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

Thanks to Vasanth sir and maniratnam sir.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts