Uncategorized சினிமா செய்திகள்

நடிகர் கவின் திருமணத் தேதி

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் கதாநாயகனாக நடித்த கவினுக்குத் திரைத்துறையில் பெரும் வரவேற்பு. அதன்பின் நிறையப் படங்களில் அவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன.

இப்போது அவர் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் புதிய படத்திலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார்.

இப்படங்களின் படப்பிடிப்பு மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது.

இவற்றிற்கிடையே நடிகர் கவின் திருமணம் நடக்கவிருக்கிறது.

2011 ஆம் ஆண்டு தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் கவின். அப்போதிருந்தே திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கினார்.

அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் நட்புன்னா என்னான்னு தெரியுமா? படம் பெரிதாகப் போகவில்லையெனினும் அடுத்த படம் லிஃப்ட் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கடுத்து வெளியான டாடா பெரிய வெற்றி.

திரைத்துறையில் வெற்றி பெற்ற பின்புதான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தாராம் கவின். இப்போது
அவருக்கு அவர் நினைத்த வெற்றி கிடைத்திருக்கிறது.இதனால் வீட்டாரின் விருப்பத்துக்கேற்ப திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாராம்.

திருமணம் என்றதும் காதல் திருமணமா? என்ற கேள்வி வந்தது. அதற்குக் காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காலத்தில் உடனிருந்த லாஸ்லியாவுடன் காதல் ஏற்பட்டது என்று சொன்னார்கள்.அதனால் இந்தக் கேள்வி வந்தது. ஆனால் அநதக் காதல் நிஜமில்லை அல்லது தொடரவில்லை என்பது ஏற்கெனவே தெளிவானது.

இப்போது பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இவருடைய திருமணம் வெகுவிரைவில் அதாவது ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து அவரே விரைவில் சொல்வார் என்கிறார்கள்.

வாழ்த்துகள்.

Related Posts