September 14, 2026
சினிமா செய்திகள் நடிகர்

வெளிச்சத்துக்கு வந்த விஜய் மகள்

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார் சாஷா.

இந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவினர் புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பள்ளி. அந்தக் குழுவில் சாஷாவும் இடம்பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் சமீபத்தில் கலந்துகொண்ட 3 போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய், வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலில் அவரோடு நடனமாடி திரையுலகில் அறிமுகமானார். சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்ஷன்’ என்ற குறும்படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால் இதுவரை விஜய் மகள் பற்றி எந்தச்செய்தியும் வந்ததில்லை. பள்ளியின் முகநூல் பக்கத்தில் அவருடைய புகைப்படம் வெளியானதும்,இந்தச் செய்தியை சமூக வலை தளங்களில் விஜய் ரசிகர்கள்
பரப்பி வருகின்றனர்.

Related Posts