September 18, 2026
சினிமா செய்திகள்

பிகில் கைதி படங்கள் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளியை ஒட்டி வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது
படக்குழு.

இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்மையில் இப்படம் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதனால் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக இன்று (அக்டோபர் 17) மாலை ஆறு மணிக்கு வெளியிட்டார்கள்.

இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது.

வழக்கமாக தீபாவளி நாளன்றே படத்தை வெளியிடுவதுதான் விஜய்க்கு விருப்பம்.

ஆனால் விநியோகஸ்தர்கள் விருப்பப்படி படம் ஆகஸ்ட் 25 வெள்ளியன்றே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே தேதியில் கார்த்தி நடித்த கைதி படமும் வெளியாகும் என்று அப்படத்தைத் தயாரித்திருக்கும் டிரீம் வாரியர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts